கேலோ இந்தியா நிகழ்ச்சிக்கு மோடியை அழைக்காமல் இருந்திருக்கலாம்: வேல்முருகன்
கேலோ இந்தியா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்காமல் இருந்திருக்கலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பேரிடரால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் விளையாட்டுப் போட்டியை இப்போது நடத்துவது அவசியம் அற்றது என்றும் இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் தொகையை பயனுள்ள செலவு செய்யலாம் என்பது என்னுடைய கருத்து என்றும் தெரிவித்தார்.
ஒருவேளை அப்படியே நடத்த வேண்டிய அவசியம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு மோடியை அழைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேரிடருக்கான நிதி கொடுக்காமல் ஆணவத்தோடு திமிரோடும் மத்திய அரசு பேசி வருவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் நிதி தருவதற்கு முன்பு மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தால் கோபேக் போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு நிச்சயம் கைவிட வேண்டும் என்றும் தென் மாவட்ட பேருந்துகள் கோயம்பேடுக்கு வராது என்பதை ஏற்கவே முடியாது என்றும் அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Edited by Siva