1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (09:18 IST)

நம்பர் 1 கடனாளி: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு கிடைத்த அந்தஸ்து!

உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு மத்தியில் நம்பர் 1 கடனாளியாக இந்தியா இருக்கிறது. 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி, உலக வங்கியிடம் இருந்து இந்தியா, மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. 
 
2010 ஆம் ஆண்டு அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு 6வது இடத்திற்கு வந்தது. மீண்டும் 2014 ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்தது. 2017 ஆம் ஆண்டு கடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் தற்போது மீண்டும் சென்று ஆண்டில் இருந்து முதலிடத்தில் உள்ளது.
 
ஒரு நாட்டின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கடன் வாங்குகிறது. எனவே வளர்ச்சி பாதையில் செல்கிறது என கூறப்படுகிறது.