1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (18:52 IST)

ஹிந்தி பேசுவது ஓவர் பிரஷர்: விஜய் கிண்டல் பதில்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நேற்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 251 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி நிதானமாக விளையாடி இலக்கை நெருங்கியது.
 
கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. கையில் இரண்டு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கர் பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே ஸ்டோனிஸை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கி, 3 வது பந்திலும் விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு, விஜய் சங்கரிடம் சக இந்திய வீரர் சாஹல், உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா? ஹிந்தி பேசுவது பிரஷரா? என்று கேட்டார். 
 
இதற்கு விஜய் சங்கர், சிரித்துக் கொண்டே எனக்கு ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர் என பதில் அளித்தார். அதன் பின்னர், கடைசி ஓவர் பவிலிங் செய்ய தயராகவே இருந்தேன்.  நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதனையே செயல்படுத்தினேன் என தெரிவித்துள்ளார்.