வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (17:09 IST)

டி-20 இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

டி-20 கிரிக்கெட் போட்டியில் மிகவும் எதிர்பார்ப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

உலகக் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்குஇடையேயான கிரிக்கெட் தொடர் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்துமோ அதைவிட பல மடங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை இருக்கையின் முனைக்குக் கொண்டு வரச் செய்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயேன கிரிக்கெட் போட்டி.

வேறு எந்த நாட்டிற்கும் இத்தனை பார்வையாளர்களும் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கும் ஏறாது.

ஆனால் அண்டைநாடுகளாக இருந்தாலும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலா இருநாட்டு உறவில் சிக்கல் நீடிக்கிறது.,

இந்நிலையில்  வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. இதனால் இம்முறை ஆட்டத்தின் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் இதுகுறித்து இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.