திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (13:53 IST)

ரசிகர்கள் வெளியிட்ட ”தல”யின் புதிய லுக்: வைரலாகும் புகைப்படம்

இராணுவத்திலிருந்து திரும்பிய தோனியின் புதிய லுக், அவரின் ரசிகர்களால் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் ஆட்டத்தை குறித்து பலரும் பல விமர்சனங்களை முன்வைத்தனர். அதை தொடர்ந்து அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் தான் இந்திய இராணுவத்தில் சேர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் தனது பயிற்சி காலம் முடிந்துள்ளதால், தோனி இராணுவத்தில் இருந்து திரும்பியுள்ளார்.ஜெய்பூர் விமான நிலையத்திற்கு வந்த தோனி தலையில் கருப்பு துணி அணிந்து வித்தியாசமாக இருக்கிறார். இதனை அங்கிருந்த பலரும் புகைப்படம் எடுத்தனர். அதனை வீடியோ எடுத்த அவரது ரசிகர் ஒருவர், தோனியின் ரசிகர்களால் இயங்கிவரும் இன்ஸ்டா பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் தோனியின் சிரிப்பு பலரை கவர்ந்துள்ளதாக கூறிவருகின்றனர். அந்த வீடியோ தோனியின் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.