தொடர்புடைய செய்திகள்
- மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி… ரிஸர்வ் நாளில் இன்று மீண்டும் தொடக்கம்!
- ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை - போட்டி ரத்து செய்யப்படுமா?
- இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகள் பற்றி ராகுல்காந்தி கருத்து
- இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்கும் சுப்மன் கில்..!
- இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 உச்சி மாநாடு நிறைவு!
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த பாக் வீரர் ஷாகின் அப்ரிடி!
இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா தனிப்பட்ட சூழல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து தற்காலிகமாக விலகி இந்தியா சென்றிருந்தார். அவர் நேபாளத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடவில்லை.
அவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து இந்தியாவுக்கு சென்ற அவர் அதன் பின்னர் இலங்கையில் உள்ள இந்திய அணியோடு இணைந்தார். 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விளையாடினார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி பும்ரா தந்தையானதை அடுத்து பரிசு ஒன்றை வழங்கி மகிழ்ந்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.