1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:30 IST)

பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி… குகேஷை வீழ்த்திய கார்ல்சன்!

அஸர்பைஜான் நாட்டில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதில் நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவின் டி குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். டி குகேஷ் மற்றும் கார்ல்சன் ஆகியோர் மோதிய போட்டியில் 49 ஆவது காய்நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தினார்.

இன்னொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின்அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா மோதினார்கள். இதில் அர்ஜுன் எரிகைசி 53 ஆவது காய்நகர்த்தலில் வெற்றி பெற்று அவரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டார்.