புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (13:13 IST)

வெற்றிப்பாதைக்குத் திரும்பப் போவது யார் ? – இன்று ஆஸி vs பாகிஸ்தான் !

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டி இன்று டாண்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

உலகக்கோப்பைப் போட்டிகள் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் 3 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று டாண்டன் மைதானத்தில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன. பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் மட்டுமே கடைசி வரை போராடி தோற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. எனவே ஆஸியை சமாளிப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டி நடக்கும் மைதானத்தில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் கம்மி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல்  3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.