செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (19:06 IST)

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த இமாலய இலக்கு! ஆனால்...

இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. டாண்ட்டன் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது
 
ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் மிக அருமையாக இருந்தது. 23வது ஓவரில்தான் முதல் விக்கெட்டே விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் வார்னர் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். வார்னர் 107 ரன்களும், பின்ச் 82 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்த உதவினர்.
 
ஆனால் இந்த இருவரையும் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலியா அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. கடைசி எட்டு ஓவர்களில் வெறும் 30 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களை இழந்தது. முகமது அமிர் அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்
 
இந்த நிலையில் 308 என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் விளையாடவுள்ளது. 308 என்ற இலக்கை பாகிஸ்தான் எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்