இந்தியா - நியூசிலாந்து டி -20 போட்டி இன்று தொடக்கம்....

new zeland
Last Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (10:03 IST)
நியூசிலாந்தில்  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்தியா அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இன்று  நடக்கவுள்ள டி20 போட்டியில் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.அதே சமயம் ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து இப்போட்டியில் எழுச்சி பெருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லிங்டனில் நெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டி சரியாக மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது.
 
ரோஹித சர்மா தலைமையில் விளையாடுகிறது இந்திய அணி. கடந்த இரண்டு ஒருநாள் தொடர்களில் ஓய்வு எடுத்த கேப்டன் விராட் கோலி இன்றும் ஓய்வெடுக்கிறார். கடந்த 2008- 2009 ல் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நியுசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
 
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் நியூசிலாந்து அணி ஜொலிக்குமா, இந்திய அணி வெற்றியைத் தக்க வைக்குமா இல்லையா என்பது இன்று மதியம் தெரிந்துவிடும்.
 


இதில் மேலும் படிக்கவும் :