பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்திய அணி...? ரசிகர்கள் ஆவல்...

cricket
Last Modified செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:07 IST)
உலகில் எந்த இரு அணிகள் மோதிக்கொண்டாலும் பரபரப்பு ஏற்படுமோ இல்லையோ... ஆனால் நிச்சயம்  கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் போது கட்டாயம் உலகமே அந்த போட்டியை உற்றுக் கவனிக்கும். 
இந்நிலையில் பாகிஸ்தானின் தொடர் சாதனையை இந்தியா முறியடிக்க முயல்கிறது என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்குத்தான் பரவசம் ஏற்படாது.
 
தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது. அடுத்து 3 போட்டிகள் கொணட டி-20 போட்டியில் பங்கேற்கிறது. இது பிப்ரவரி   6 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி முடிவடைகிறது.
pakisthan
இதற்கும் பாகிஸ்தானின் சாதனை முறியடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றால்..பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 11 தொடர்களில் வெற்றி வெற்று சாதனை படைத்தது.  மட்டுமல்லாமல் சர்வதேச ட்கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில்ல்  0-2 என்று தொடரை பறிகொடுத்தது. 
 
இந்நிலையில் இந்திய அணி டி-20 போட்டிகளில் 8 தொடர்களில் தொடர் வெற்றியும் 2 தொடர்களில் டிராவும் செய்துள்ளன.எனவே நியூசிலாந்துக்கான டி-20 தொடரை இந்திய அணி ;பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :