1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (15:16 IST)

வெற்றிக்கு அருகில் இந்திய அணி! கலக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகப்பிரகாசமான வாய்ப்புள்ளது.

செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் முதல் இன்னிங்சிலும், 174 ரன்கள் இரண்டாவது இன்னிங்சிலும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி வெற்றி பெற 305 ரன்கள் என்ற இலக்கை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது ஆட்டத்தை நிறைவு செய்தது. அதையடுத்து இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் பூம்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தியது. அதனால் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்களே தேவை என்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.