கொரோனாவில் தீரமாக பணியாற்றிய செவிலியர்கள்! – ”கொரோனா போர் வீரர்கள்” விருது!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக “கொரோனா போர்வீரர்கள்” உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உலக செவிலியர் தினத்தையொட்டி தமிழகத்தில் சிறப்பாக சேவை புரிந்த செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படாத நிலையில் 2020 மற்று 2021 ஆகிய ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் நலவாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கினார். திறம்பட செயல்பட்ட 14 செவிலியர்களுக்கு ”சிறந்த செவிலியர்” விருதும், 3 செவிலியர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதும், கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய 32 செவிலியர்களுக்கு “கொரோனா போர்வீரர்கள்” விருதும் வழங்கப்பட்டது.