வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:06 IST)

கொரோனா தொற்றைக் குறைக்க இதுதான் 'வலிமை'யான வழிமுறை

கொரொனா தொற்றைக் குறைக்க முகக்கவசம் அணிவதுதான் வலிமையான வழிமுறை என மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா சில மாதங்களாகக் கட்டுக்குள் உள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக காவல்துறை  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளஹ்டு. இதனைத் தடுக்க முககவசம் எளிமையான வழிமுறை அல்ல; ஆனால் வலிமை ஆன வழிமுறை என மக்கள்    நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.