புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (14:07 IST)

உலகக்கோப்பை பைனலில் இந்தியா vs பாகிஸ்தான் ? – குழப்பத்தில் பிசிசிஐ…

புல்வாமாத் தாக்குதலை அடுத்து உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடக்கூடாது என பேச்சுகள் எழுந்துள்ளதால் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.
 

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கியுள்ளது. பதில் தாக்குதல் நடத்தும் விதமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர்விமானங்களைக் கொண்டு சோதனை முயற்சியும் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாய சூழல் உருவாகியுள்ளது.
 

இந்த தாக்குதல் இப்போது கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் இனி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பைலேட்ரல் சீரிஸ் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலானப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்த தர்மசங்கடமான நிலை குறித்து இப்போது பிசிசிஐ வட்டாரத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வந்துள்ளது. அதில் ’இந்திய அரசு வற்புறுத்தினால் இந்திய அணி பாகிஸ்தானோடு விளையாடாது. அப்படி நாம் விளையாட மறுத்தால் நமக்கானப் புள்ளிகள் குறைக்கப்படும். ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதினால் அப்போது நாம் விளையாட மறுத்தால் கோப்பைப் பாகிஸ்தானுக்கே வழங்கப்படும்.’ என்று தெரிவித்துள்ளது.