புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:18 IST)

உச்சம் தொட்ட தங்கம் – அச்சத்தில் மக்கள் !

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இனித் தங்களால் தங்கம்  வாங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

தங்கம் விலைக் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25,568க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,196-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகள் தங்க உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்க நுகர்வில் முன்னிலையில் உள்ளன. திருமணம் போன்ற அனைத்து சுபக் காரியங்களிலும் இந்தியர்களால் தங்கம் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறிவருகிறது.