ராணுவத்தின் பொம்மைதான் இம்ரான்கான்: முன்னாள் மனைவி பேட்டி!

Last Modified புதன், 20 பிப்ரவரி 2019 (07:30 IST)
இம்ரான்கான் ராணுவத்தின் பொம்மையாக செயல்பட்டு வருவதாகவும், ராணுவத்தின் உத்தரவிற்காக அவர் காத்திருப்பதாகவும் இம்ரான்கானின் முன்னாள் மனைவிகளில் ஒருவரான ரஹிம்கான் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர் ஒருவாரம் கழித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கமளித்த நிலையில் ரஹிம்கான் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சொல்கிறது என்பதற்காக இல்லாமல் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையில் பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என்றும் இம்ரான்கான் பிரதமர் பதவி பொறுப்பேற்ற இந்த ஏழு மாதங்களில் அவர் தீவிரவாதிகளுக்கு எதிரான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் ரஹிம்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.


imran
ஜெய்ஷ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பாகிஸ்தான் மேல் இருக்கின்றது என்றும், இதனை கருத்தில் கொண்டு இனியாவது சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஹிம்கான் மேலும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :