தொடர்புடைய செய்திகள்
- என்னை யாரும் தடுக்க முடியாது ; தொடர்ந்து பேசுவேன் - ஆவடிகுமார் அதிரடி
- ஓகி புயலால் எத்தனை பேர் மாயம்? மீனவ அமைப்பினரின் அதிர்ச்சிப் பட்டியல்
- ஆர்.கே.நகர் இறுதிப்பட்டியல் வெளியீடு - விஷாலுக்கு வாய்ப்பு இல்லை
- வாக்காளர் பட்டியலில் சேரணுமா? இனி பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் போதும்
- தாக்குதல் பட்டியலை வெளியிட்ட வடகொரியா: பீதியில் உலக நாடுகள்!!
வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலிலும் வளராத இந்தியா....
பொருளாதாரத்தின் அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
இதில் முக்கியமானது என்னவென்றால் சீனா, பாகிஸ்தானை விட இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதுதான். இந்த பட்டியல் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் பங்கேற்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.
வளரும் பொருளாதாரம் படைத்த 79 நாடுகள் பட்டியலில் இந்தியா 60வது இடத்தை பிடித்துள்ளது. சீனா 15வது இடத்தினையும், பாகிஸ்தான் 52வது இடத்தினையும் படித்திருக்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் மட்டும் அல்லாமல் இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபால் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளது.
வளரும் பொருளாதாரம் படைத்த நாடுகள் குறியீடானது 5 வகைகளை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அவை அபிவிருத்தி வளர்ச்சி விகிதம் - குறைந்து, மெதுவாக குறைந்து, நிலையான, மெதுவாக மேம்படுதல் மற்றும் மேம்படுதல் என்பனவாகும்.
