திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (10:12 IST)

6 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மும்பையில் தொடங்கியது என்பதும், நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரண்டு விக்கெட்டுகள் மடமடவென விழுந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மயங்க் அகர்வால் 130 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சாஹா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இன்று அவுட் ஆகினர் என்பது முதல் பந்திலேயே அஸ்வின் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 6 விக்கெட்டுகளையும் அஜாஷ் பட்டேல் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது