புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:51 IST)

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

மும்பை டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து ஜடேஜா, ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் வானிலை காரணமாக டாஸ் தாமதமான நிலையில் இப்போது டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.