திங்கள், 28 அக்டோபர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பது நன்மை தருமா...?

பொதுவாக நமது வீடுகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வளர்ந்தால் நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.
வெற்றிலையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கருப்பு வெற்றிலை. மற்றொன்று வெள்ளை வெற்றிலை. வெள்ளை வெற்றிலை.. காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை... காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும்.
 
பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சரியான விதத்தில் கலந்து வெற்றிலை போட்டால் தான் நன்கு வாய் சிவப்பாக இருக்கும். அப்படி இருந்தால் நமது உடம்பில் கால்சியம் சத்து நன்றாக உள்ளது என்று அர்த்தம். இந்த தாம்பூலம் தரிப்பது என்பது ஆதி காலத்தில் இருந்தே கிராமப் புரங்களில்  இருந்து வருகின்றது.
 
வெற்றிலை என்பது ஓர் அபூர்வ மூலிகையாகும். இது மருத்துவ குணத்துடன், மகத்துவம் மிக்கதாகவும் விளங்குகிறது. பொதுவாக நம் இல்லத்தில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும் வெற்றிலை, பாக்கு வைத்துதான் தொடங்குகிறோம்.
 
வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். ‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை’  என்பது பழமொழி. வெறும் வெற்றிலை கொடுத்தால் உறவு பகையாகி விடும் என்பார்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல, தாம்பூலம் இல்லாது எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. 
 
இப்படிப்பட்ட சத்திய வாக்காகத் திகழும் வெற்றிலை, அனைவர் வீட்டிலும், அனைத்துச் சூழ்நிலையிலும் எளிதில் வளராது. குளுமையான சூழ்நிலையில் தான் வளரும். ஒருவர் வீட்டில் வெற்றிலைக் கொடி நன்றாக வளர்ந்தால், அவர்கள் இல்லம் செல்வச் செழிப்போடு சிறப்பாக இருக்கும். வெற்றிலைலட்சுமி  கடாட்சமுடைய மூலிகை. அதனால் இதை காய வைத்து தூக்கி எறியக்கூடாது என்று சொல்வார்கள்.
 
பொதுவாக சனி பிடிக்காத தெய்வமாக விளங்கும் அனுமனுக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வந்தால் வெற்றிகள் வந்து சேரும். வெற்றிலையை மட்டும் மாலையாக்கி அணியக்கூடாது. அதனுடன் சீவல் அல்லது பாக்கு சேர்த்து மாலையாக்கி அணிவித்து வழிபட்டால் எப்படித் தடைபட்ட காரியமும் எளிதில்  முடியும்.