மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகள்: திமுகவுக்கு பெரும் நெருக்கடி!
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளை இணைத்து ஒரு வழியாக தேர்தலை திமுக சந்தித்தாலும் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவியை பிரித்துக் கொடுப்பதில் பெரும் நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது
காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யுனிஸ்டுகள் ஆகியவை தலா ஒன்று அல்லது இரண்டு மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிகளை கேட்க திட்டமிட்டு உள்ளது
ஆனால் ஒரு மேயர் மற்றும் ஒரு நகர்மன்ற தலைவர் பதவியைக் கூட திமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க விரும்பவில்லையாம். அதற்கு பதிலாக துணைமேயர் அல்லது துணை நகர்மன்ற தலைவர் பதவியை கொடுக்கவே திட்டமிட்டுள்ளதாம்
இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா? மேயர் மற்றும் நகர் மன்றத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு திமுகவுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்