1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (14:47 IST)

சூப்பர்மேன்லாம் பார்ட் வருது.. இசை வரக்கூடாதா..? – இளையராஜாவின் புதிய ஆல்பம்!

இளையராஜாவின் முந்தைய ஆல்பமான “ஹவ் டூ நேம் இட்?”ன் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை இளையராஜா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ், இந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. திரைப்பட இசை மட்டுமல்லாது ஆல்பமாக தனியாக சில இசை ஆல்பங்களையும் இளையராஜா வெளியிட்டுள்ளார். அவற்றில் பிரபலமானது 1986ல் வெளிவந்த “ஹவ் டூ நேம் இட்” என்ற ஆல்பம்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா “சூப்பர்மேன், பேட்மேன் போன்ற படங்கள் எல்லாம் பார்ட் 1 பார்ட் 2 என வரும்போது இசை அப்படி பார்ட்டாக வரக் கூடாதா! அதற்குதான் வருகிறது ஹவ் டூ நேம் இட் பார்ட் 2” என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் புதிய ஆல்பம் குறித்த இந்த அறிவிப்பு இசை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.