திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:18 IST)

மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மிர்ச்சி சிவா இந்த ஆண்டு மட்டும் 6 திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் வகைகளில் ஒன்றான ‘இடியட்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மிர்ச்சி சிவா, நிகில் கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘இடியட்’ . இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராம்பாலா இயக்கத்தில் விக்ரம் செல்வா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் மிர்ச்சி சிவாவுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது