1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (10:02 IST)

மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

Ind w
மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Siva