2வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடியால் இந்தியா வெற்றி..!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலையே விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் ஜெய்ஸ்வால் 68 ரன்களும், ஷிவம் துபே 63 ரன்களும் அதிரடியாக அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 15. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
Edited by siva