1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (20:54 IST)

5 ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு!

5 g network
5 ஜி சேவையை பயன்படுத்த  1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவில், ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்குகள் உள்ளன. இந்த  நெட்வொர்க்களுக்கு என பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளன.

4 ஜி நெட்வொர்க் பிரபலமாக இருந்த நிலையில், அதிவேக இணையதள சேவையைப் பெறும் நோக்கில்,  ஜி நெட்வொர்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கென  5ஜி மொபைல் போன்களும் அறிமுகமாயின.

இந்த நிலையில், தற்போது பலரும்  5 ஜி சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், 1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சோதனை அடிப்படையில், 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 2024ல் நடைமுறைக்கு வரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.