வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜனவரி 2024 (09:36 IST)

இந்தியா கிரிக்கெட் க்ரவுண்டை குறை சொல்ல மாட்டோம்.. ஏன்னா..? – இங்கிலாந்து துணை கேப்டன் சொன்ன விளக்கம்!

Ollie Pop
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் மைதானங்கள் குறித்து இங்கிலாந்து துணை கேப்டன் பேசியுள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.


இந்த போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி துணை கேப்டன் ஓலி போப் “இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் அதுகுறித்து நாங்கள் எந்த குற்றச்சாட்டும் வைக்கமாட்டோம். இங்கிலாந்தில் ஆடுகளங்கள் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக தயார் செய்யப்படுகிறது. அதுபோல இந்தியாவும் தங்கள் மைதானத்தை சுழற்பந்துகளுக்கு ஏற்றார் போல் தயார் செய்வதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K