புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (11:39 IST)

சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்த பெண்

ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்திருக்கிறார்.
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் அவரது கார் பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. பெரும் பள்ளத்தில் விழுந்ததால் அவர் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்தார்.
 
ஒரு வாரமாக பள்ளத்தில் சிக்கிய அந்த பெண், காரிலிருந்த திண்பண்டங்களையும், தண்ணீரையும் சாப்பிட்டு வந்தார். அதுவும் தீர்ந்து போகவே அந்த பெண் உயிர்பிழைக்க தனது சிறுநீரை குடித்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணை மீட்புத் துறையினர் மீட்டனர்.
 
இதுகுறித்து பேசிய அந்த பெண் சமயோஜிதமாக நான் செயல்பட்டதால் தான் இப்பொழுது உயிருடன் இருக்கிறேன் என கூறினார்.