வாட்ஸ் அப் இந்திய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் சமூக வலைத்தள செயலிக்கு புதிய தலைவராக அபிஜித் போஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப்பில் போலி செய்திகள் மிக வேகமாக பரவி வருவதால் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக அப்பாவிகள் சிலர் வாட்ஸ் அப் வதந்தியால் குழந்தைகள் கடத்தியாக சந்தேகமடைந்து கொல்லப்பட்டனர். இதனை தவிர்க்க இந்தியாவுக்கு என ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது.
இதனையடுத்து அபிஜித் போஸ் என்பவர் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என தெரிகிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அபிஜித் போஸ் தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
130 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலியை இந்தியர்கள் மட்டும் சுமார் 20 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.