மதுவுக்கு அடிமை ஆனேன் ...தற்கொலை செய்ய முயன்றேன்... முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!

praveenkumar
sinoj kiyan| Last Modified புதன், 22 ஜனவரி 2020 (21:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார், தான் மன அழுத்தம் காரணமாக பிஸ்டலில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார். இவர் சில காலம் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
பிரபப இதழுக்கு இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது ;
 
என் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், நான் ஏமாற்றம் அடைந்தேன். தனிமையில் இருக்கும் போது கடுமையான மன உளைச்சலை சந்தித்தேன். அதனால் ஒரு இரவில் துப்பாக்கியால் சுட்டி தற்கொலை முடிவு செய்தேன். ஆனால் என்  குழந்தைகளின் சிரித்த முகத்தை பார்த்த பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :