திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (20:05 IST)

தோனியை ’ஓவர் டேக்’ செய்து விராட் கோலி புதிய சாதனை!

கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் கொடி கட்டிப் பறந்தவர் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டி- 20 கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை வென்று சாதித்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த, உலகப் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து ஓய்வில் இருந்துவரும் தோனி, தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனை தற்போது கோலி படைத்துள்ளார்.
 
இங்கு வங்க தேசத்துக்கு எதிரான போட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
 
இதன்மூலம்  இந்திய அணிக்கு 10 முறை இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்  கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. 
 
கேப்டன் தோனி 9 முறை இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தந்தது இதற்கு முன் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.