ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (22:09 IST)

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: ஜப்பானை வீழ்த்தி தென்கொரியா வெற்றி

hockey
உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் ஒடிஷா மா நிலம் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
 

இப்போட்டியில்  மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில்,இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் பிரிவு –பி-ல் தென் கொரியா- ஜப்பான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், தென் கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று நடந்த இன்னொரு போட்டியில் பெல்ஜியம்- ஜெர்மனி அணிகள் மோதின. இதில், இரண்டு அணிகளும் 2-2 ஆகிய கோல் கணக்கில் சம நிலை பெற்றன.