வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:49 IST)

டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம்: தென்கொரியா அரசு அதிரடி

Tesla
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்களுக்கு ரூபாய் 18.50 கோடி ரூபாய் தென்கொரிய அரசு அபராதமாக விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மக்களை ஏமாற்றும் வகையில் மின்சார கார் விளம்பரங்களை வெளியிட்டதால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த அபதாரம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
குளிர்காலத்தில் 50 சதவீதம் மைலேஜ் குறைவாக டெஸ்லா கார்கள் தரும் என்ற தகவலை மறைத்து எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம் என்று டெஸ்லா நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக தென்கொரிய வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டி உள்ளதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran