1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2022 (16:11 IST)

உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

indian hockey
உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்தாண்டு, ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை  ஒடிஷாவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் ஜனவரி 13 ஆம் தேதி ஸ்பெயினுடன் மோதவுள்ளது.

இதில், கோல்கீப்பர் கிரிஷ்ணன் பகதூர் பதக், மன்பிரீத் சிங், ஹர்த்திக் சிங், நீலகண்ட சர்மா, சம்சீர் சிங், விவேக் சாகர், அஹஸ்தீப் சிங், அபிஷேக், ராஜ்குமார் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.