1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (18:37 IST)

கிரிப்டோ கரன்சி தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி!

கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
 
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான் நிர்ணயிக்கின்றன.
 
பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி.
 
கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது. இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.