1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:49 IST)

கால்பந்து ஹீரோ ரொனால்டோவின் மீது பாலியல் குற்றச்சாட்டு...

போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்தாட்ட நட்சத்திரமான ரொனால்டோ தனது திறமையால் உலகின் சிறந்த  கால்பந்து வீரராக வளம் வந்து  ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபலமான கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட்டிலிருந்து இந்த ஆண்டு தனது ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து அவர் ஜூவண்ட்ஸ் கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாடி  வருகிறார்.
 
இந்நிலையில் ரொனால்டோ தன்னை வன்புணர்வு  செய்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின்(34) என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக எனக்கு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அந்த பெண் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்து ரொனால்டோ கூறியதாவது:
 
இதுபோல பல புகார்களில் என்னை சிக்க வைக்க முயன்றுள்ளனர். இந்த புகார்  ஜோடிக்கப்பட்ட பொய் என்று கூடிய சீக்கிரத்தில்  தெரியும் என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பு இதே காத்திரின், ரொனால்டோ தன்னை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.