திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (08:16 IST)

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: பெங்களூருவிடம் தோல்வியடைந்த சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்தது.
16 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக நேற்று முன்தினம் கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. இதில் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
 
ஆட்டம் தொடங்கிய 41வது நிமிடத்தில் பெங்களூர் அணி தங்களது முதல் கோலை அடித்தது. சென்னை அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணி சென்னை அணியை தோற்கடித்தது.