வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (15:49 IST)

பாதி மைதானத்துக்கு வந்து பந்தை தாவிப் பிடித்த விக்கெட் கீப்பர் ! வைரலாகும் வீடியோ

திறமை உள்ளவர்களை இந்த உலகம் வாரி அணைத்துக் கொள்ளும். அதுவும் உலக அளவில் அதிகப்பேர் ரசிகர்களாக இருக்கும் கிரிக்கெட் திறமையுள்ளவர்களுக்கு அதிக கிராக்கியுண்டு. அவர்கள் மக்களிடம் அதிக பிரபலமாகுவார்கள், மீடியா வெளிச்சமும் அவர்கள் மீது விழும்.

இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பந்து வீச்சாளர் பந்து வீசியதும் அதை பேட்ஸ் மேன் வேகமாக உயர்த்தி அடித்தார்.

அப்போது விக்கெட் கீப்பர் வரிசையில் நின்றிருந்த ஒரு வீரர் பாதி மைதானத்துகு ஓடி வந்து அந்தக் கேட்சைப் பிடித்தார்.

இது  அசாதாரண கேட்ச் என்று பலரும் இளம் வீரரைப் பராட்டி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது