19வது ஓவரை சொதப்பிய தீபக் சஹார்.. முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வி..!
நேற்று தொடங்கிய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் 19-வது ஒவ்வொரு வீசிய தீபக்சஹார் சொதப்பியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 179 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணியின் சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார், இந்த நிலையில் 18 ஓவர் முடிவில் குஜராத் அணி 23 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்தது
ஆனால் 19வது ஓவரில் தீபக் சஹார் 15 ரன்கள் கொடுத்ததால் இறுதி ஓவரில் வெற்றி பெற குஜராத்துக்கு எட்டு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ரஷீத் கான் ஆட்டநாயகன் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
Edited by Mahendran