சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மே 2023 (21:45 IST)

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: நிகோலஸ் ஜாரி சாம்பியன் பட்டம்

geneva open tennis
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நிகோலஸ்  ஜாரி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர்  நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில், சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிர்கோர் டிமித்ரோவ் ஆகியர் இருவரும் மோதினர்.

இருவருக்கும் இடையிலான போட்டியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்திய நிலையில், நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற  நேர் செட்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன்பு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், முன்னணி வீரர் ஸ்வரேவை,  நிகோலஸ்  வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பை வென்ற நிகோலஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.