வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:44 IST)

ஒழுங்கா விளையாடுங்க! கோலியை கண்டித்த கங்குலி !

ஒழுங்கா விளையாடாத விராத் கோலிக்கு டோஸ் விட்ட கங்குலி! 


 
நாதன் லயனிடம் தொடர்ந்து தனது விக்கெட்டை இழந்து வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் இனி லயனின் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார்.
 
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இவரை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி கேப்டன் கோலியின் விக்கெட்டை தொடர்ந்து அவர் தான் எடுத்து வருகிறார்.
 
இதற்கு தீர்வுக்காணும் வகையில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் ''இந்திய வீரர்கள் லயன் ஆஃப் சைடுக்கு வெளியே வீசும் பந்துகளை தடுத்து ஆடுகிறார்கள். அது தான் லயன் விக்கெட்டுகளை கைப்பற்ற காரணமாகிறது. இது குறித்து கோலிக்கு செய்தி அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவருக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்றே ஒன்றுதான். லயனை தடுத்து ஆடுவதற்கு பதில் ஆக்ரோஷமான அடித்து ஆடினால் எளிதாக 300-350 ரன்களை கடக்க முடியும்.
 
லயன் நல்ல சுழற்பந்துவீச்சாளர் தான். ஆனாலும் வார்னே, முரளிதரன் போன்றவர்கள் போல் அல்ல. இவரிடம் இந்தியர்கள் துணைக்கண்டத்துக்கு வெளியே விக்கெட்டுகளை இழப்பது வருத்தமாக உள்ளது'' என்றும் கூறியுள்ளார்.
 
நாதன் லயன் இரண்டாவது டெஸ்ட்டில் மட்டும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 82 டெஸ்ட்களில் அடியுள்ள லயன் 334 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.