வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (18:23 IST)

எப்போதும் முதல் பந்தை எதிர்கொண்ட கங்குலி – சச்சின் சொன்ன காரணம் என்ன?

உலகின் மிகச்சிறந்த தொடக்க ஜோடியான சச்சின் கங்குலி ஜோடி பார்ட்னர்ஷிப் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை கங்குலி பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்திய அணியின் சச்சின் மற்றும் கங்குலி ஜோடி ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை வைத்துள்ளனர். இவர்கள் ஜோடி களத்தில் இறங்கும் போது எப்போதும் கங்குலியே முதல் பந்தை எதிர்கொண்டு வந்தார். இதுகுறித்து இந்திய அணியின் இளம்வீரர் மயங்க் அகர்வால் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் உரையாடலில் ‘எப்போதும் சச்சின் என்னையே முதல் பந்தை எதிர்கொள்ள செய்வார். இதுகுறித்து நீங்களும் சிலமுறை முதல் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என சச்சினிடம் கூறுவேன். அதற்கு அவர் இரு பதில்கள் வைத்திருப்பார். அவர் பார்மில் இருந்தால் அதை மெய்ண்டென் செய்ய ரன்னர் முனையில் இருப்பதே சிறந்தது என நினைப்பார். அதே போல அவ்ட் ஆஃப் பார்மில் இருந்தாலும் பார்முக்கு வர ரன்னர் முனையே சிறந்தது எனக் கூறுவார்.

எப்போதாவது சில நேரம் நான் அவருக்கு முன்னாலேயே சென்று ரன்னர் முனையில் நின்றுகொண்டால் அவர் வேறுவழியில்லாமல் முதல் பந்தை எதிர்கொள்ள செல்வார். அதுபோல ஓரிரு முறை நடந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.