மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பிரபல வீரர் திடீர் விலகல்

Last Modified வியாழன், 12 டிசம்பர் 2019 (08:00 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளது

டிசம்பர் 15ஆம் தேதி சென்னையிலும் டிசம்பர் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், டிசம்பர் 22ஆம் தேதி கட்டாக்கிலும் என 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இடம் பெற்றிருந்த பிரபல பேட்ஸ்மேன் ஷிகர் தவான் சமீபத்தில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து இருந்தார். அவர் ஒருநாள் போட்டி தொடர் தொடங்கும் முன்னர் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது அவர் முழு அளவில் குணம் அடையாததால் அவர் இந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடிய மயங்க் அகர்வால் ஒருநாள் போட்டி அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை அடுத்து இதுவரை டெஸ்ட் பிளேயர் ஆக இருந்த மயங்க் அகர்வால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :