தொடர்நாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பணம் செய்த கோலி !

Last Modified வியாழன், 12 டிசம்பர் 2019 (07:47 IST)
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரானத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் கோலி தனது மனைவிக்கு அதை சமர்ப்பணம் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான மூன்றாவது டி 20 போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மா (71), கே எல் ராகுல் (91), கோலி (71) ஆகியோரின் அதிரடியால் 240 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 173 ரன்கள் மட்டுமே சேர்த்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தொடர்  முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் கோலி தொடர்நாயகன் விருதை வென்றார். அதுபற்றி பேசிய அவர் ‘முதலில் பேட் செய்து வெல்வது குறித்து நாங்கள் விவாதித்தோம். அதைக் களத்தில் செயல்படுத்தியுள்ளோம். இன்று எனது இரண்டாவது திருமண நாள். இந்தவிருதை எனது மனைவிக்கு சமர்ப்பணம் செய்கிறேன். எனது சிறந்த இன்னிங்ஸ்களில் இன்றைய ஆட்டமும் ஒன்று. விரைவில் வர இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட இது உந்துதலாக இருக்கும். ரோஹித்தின் அதிரடியே இன்றைய போட்டியின் முக்கியமான ஒன்றாக அமைந்தது.’ எனக் கூறியிள்ளார்இதில் மேலும் படிக்கவும் :