வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 மே 2024 (20:38 IST)

சென்னையில் Gaming திருவிழா.. வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் பரிசு! – The Versus Festival!

The Versus
கேம் விரும்பிகளுக்காகவே பல்வேறு கொண்டாட்டங்களுடன் சென்னையில் முதல் முறையாக கேம் நிகழ்வு நடைபெற உள்ளது.



90கள் தொடங்கி இப்போது வரை சிறுவர்கள், இளைஞர்கள் பலரையும் ஈர்த்து வரும் ஒரு விஷயம் Gaming. 90களில் Bit Games வகையான சூப்பர் மேரியோ, ட்ராகன் பால், நிஞ்சா விளையாட்டுகளில் தொடங்கி இப்போது GTA, Free Fire, PUBG, Call of Duty என கேமிங் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவில் Fighting Games வகைமையில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் முதன்முறையாக தி வெர்சஸ் என்ற கேமிங் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் கூடவே காஸ்ப்ளே, பயிலரங்குகள், Free Arcade Game Zone என பல பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்து ஒரு புதிய Pop Culture அனுபவத்தை தி வெர்சஸ் வழங்க உள்ளது.
இதில் நடைபெறும் Fight Gaming Contestல் வெல்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகையாகவும், காஸ்ப்ளே போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.45 ஆயிரம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அனிமே குறித்த உரையாடலில் திரைப்பட இயக்குனர், யூட்யூப் க்ரியேட்டர் விஜய் வரதராஜன், நருட்டோ உள்ளிட்ட தொடர்களுக்கு டப்பிங் பேசிய சாய் சுஜித், அனிமே ஆர்வலர் ப்ரவீன் உள்ளிட்டோர் பேச உள்ளனர்.

அதுபோல பயிலரங்குகளில் அனிமே ஆர்ட் குறித்து அனிமேஷன் கலைஞர் டெரிக் டோம்னிக் டிசோசா, காஸ்ப்ளே ப்ராபர்டி மேக்கிங் குறித்து ப்ராபர்டி ஆர்டிஸ்ட் ஆதித்யா அசோக், சிறப்பு பேச்சாளராக தி போர்ட் ரூம் கபே நிறுவனர் வருண் தேவநாதன் ஆகியோர் பங்குபெற உள்ளனர்.

இந்த நிகழ்வில் ஜப்பானிய உணவு முறைகளை செய்வது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ.763 வசூலிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 45 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணமில்லை.