1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (19:35 IST)

ஒரு வழியாக டாஸ் வென்ற சிஎஸ்கே.. முதல் பேட்டிங் யார்? விளையாடும் லெவன் வீரர்கள் விவரங்கள்..!

கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அணி டாஸ் வெல்லாத நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் குஜராத் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் தொடரின் 59ஆவது போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியின் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத் அணியை பொருத்தவரை நான்கு போட்டிகளில் மட்டுமே இதுவரை வென்று உள்ளதால் இந்த போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு அணிகளின் ஆடும் 11 வீரர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
குஜராத்: சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக்கான், மில்லர், வாடெட், திவெட்டியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மொஹித் சர்மா, கார்த்திக் தியாகி
 
சிஎஸ்கே: ருத்ராஜ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல், ஷிவம் டுபே, மொயின் அலி, ஜடேஜா, தோனி, சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங்
 
Edited by Mahendran