மகளை அருகில் வைத்துக்கொண்டு சிஎஸ்கே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தோனி: வைரல் வீடியோ!!

Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (21:39 IST)
பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 11 ஐபிஎல் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துகொள்ளலாம். 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை மேட்ச் கார்ட் சலுகையை பயன்படுத்தி தக்க வைத்துகொள்ள இயலும். தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் இன்று சமர்பிக்கப்படது.


சூதாட்டம் புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நிறைவடைந்து, இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாடுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை அணி மீண்டும் தக்க வைத்துள்ளது.


இதற்கான ஒப்பந்ததில் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா கையெழுத்திடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. தோனி கையெழுத்திடும் போது அவரது மகள் அருகில் விளையாடிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :