திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (07:15 IST)

இரண்டு தோல்வியால் இந்திய அணி பலவீனமாகிவிடுமா? காம்பீர்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்திய, தென்னாபிரிக்க நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்தது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்று வந்த இந்திய அணிக்கு இது அதிர்ச்சி தரும் நிலையில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியை பலவீன அணியாக கருதக்கூடாது என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ' ‘‘இந்த நேரத்தில் இந்திய அணிக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். விமர்சனம் செய்யக்கூடாது. இந்த அணி அற்புதமான ரன்களை குவித்துள்ளது. இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி அவர்களை மோசமானவர்களாக ஆக்கிவிடாது. நமது வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை காட்டிலும், எதிரணிகளை பாராட்ட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஆட்டம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள நிலையில் காம்பீரின் கருத்து இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது.