வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (19:59 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர்? சூசக தகவல்...

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.  
 
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி இந்தியாவுக்கு எதிராக சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அரசு உத்தரவிட்டால் எல்லை தாண்டிச்சென்று எந்த ஒரு தாக்குதலையும் நடத்தத் தயார்? என கூறி இருப்பது பற்றிய தங்களது கருத்து என்ன என் கேட்கப்பட்டது. 
 
ஆனால், பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் புரிவதற்கான வாய்ப்பை சூசகமாக நிராகரித்தார். மேலும், அவர் கூறியதாவது, பாகிஸ்தான் ஒருபோதும் வலியப்போய் தாக்குதல்கள் நடத்தாது. எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. 
 
ஆனால் காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்து கொள்ளாமல், மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு, பாகிஸ்தானில் உள்ள 30 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்புவதற்கு உலக நாடுகள் உதவவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.